மாற்றுத்திறனாளி மாணவர்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் – பெற்றோர் கோரிக்கை!

Saturday, December 17th, 2016

கிளிநொச்சி மாவட்டதிதின் விசேட தேவையுடைய மாணவர்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வலயத்திலே 600இற்கு மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்களின் பராமரிப்பு, கல்வி போன்ற தேவைகளை நிறைவேற்றுவதில் பெற்றோர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பான இம்மாணவர்களை பராமரிப்பதற்கு பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. உதவி அமைப்புக்கள் இம் மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவேண்டும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் பிறந்த குழந்தைகள் பல விசேட தேவையுடையவர்களாக உள்ளனர். இப்பிள்ளைகளில் பாடசாலைக்குச் செல்லக்கூடிய மாணவர்களுக்கு உதவி அமைப்புக்கள் உதவவேண்டும். இதேவேளை கிளிநொச்சி வலயக்கல்வி பனிமலையில் முறைசாராக் கல்விப்பிரிவின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான தனியான வகுப்புகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC03066

Related posts: