மானிப்பாய் பொதுச்சந்தையில் இடநெருக்கடியால் பெரும் சிரமம் – நுகர்வோர் சுட்டிக்காட்டு!

Wednesday, November 30th, 2016

மானிப்பாய் சந்தையில் உள்ள கடலுணவு விற்பனைப் பகுதியில் நிலவும் இடநெருக்கடியால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

வலி.தென்மேற்கில் 7 பொதுச் சந்தைகள் காணப்படுகின்றன. அவற்றில் மானிப்பாய் பொதுச்சந்தையே பிரதேச சபைக்கு அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றது. பிரதான வீதிக்கு அருகே சிறிய நிலப்பரப்பைக் கொண்ட இந்தச்சந்தை, மரக்கறி விற்பனைப் பகுதி, கடலுணவு விற்பனைப் பகுதி, இறைச்சி விற்பனைப் பகுதி, பழக்கடைகள், வாகன பாதுகாப்புத் தரிப்பிடம் என்பவற்றைக் கொண்டுள்ளது. ஆனைக்கோட்டை, மானிப்பாய், சுதுமலை, நவாலி, சண்டிலிப்பாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சந்தையையே நம்பியுள்ளனர். கடலுணவு வற்பனை செய்யும் சிறிய கட்டத்துக்குள் சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் வியாபாரம் செய்கின்றனர். கொள்வனவு செய்ய வரும் மக்கள் இட நெருக்கடியால் ஒருவருக்கொருவர் முட்டிமோதும் நிலை காணப்படுகின்றது. உள்ளே செல்லவோ, வெளியேறவோ முடியாத நிலமை காணப்படுகிறது.

சந்தை வளாகத்தால் அமைக்கப்பட்டுள்ள வாகனப் பாதுகாப்புத் தரிப்பிடத்தில் போதிய இடவசதியில்லை. வாகனங்கள் பரவலாக ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. மக்கள் நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. மழை காலத்தில் சந்தை வளாகம் சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றது. இவை குறித்து அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் தெரிவித்தனர். புதிய சந்தைக் கட்டடம் அமைக்கப்படுகின்றது. அது விரைவில் திறக்கப்படும். அதன்பின்னர் இவ்வறான அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாது – என்று வலி.தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்தார்.

July232015

 

Related posts: