மானிப்பாயில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

Saturday, June 9th, 2018

மானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழுவினர், வீட்டிற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் இந்த சமூகவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன்போது வீட்டின் கதவு, யன்னல்கள், அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: