அதிக இலங்கையர் வாய், கழுத்து சார்ந்த புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் – புற்றுநோய் ஒழிப்பு செயற்றிட்ட நிபுணர்!

Thursday, July 26th, 2018

மாதத்திற்கு ஒரு தடவையேனும் கண்ணாடிக்கு முன் சென்று வாயை சுயமாகப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் வெள்ளை மற்றும் சிவப்பு நிற வாய்  புற்றுநோயை அறிகுறி ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும் என புற்றுநோய் ஒழிப்பு செயற்றிட்டத்தின் நிபுணர் டொக்டர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்தார்.

இதேவேளை கூடுதலான இலங்கையர்கள் வாய் மற்றும் கழுத்து சார்ந்த புற்று நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்தாண்டுகளில் இந்த அளவைக் குறைப்பது அவசியமாகும். முன்கூட்டியே அறிந்துகொள்வதன் மூலம் வாய் புற்றுநோயை குணமாக்க முடியும். வெற்றிலை, புகையிலை என்பன வாய் மற்றும் கழுத்து புற்று நோய்க்கான பிரதான காரணங்களாகும். இவ்வாறான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு வருடாந்தம் 13 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவாகிறது. வாய் புற்றுநோய் ஏற்பட முன்னர் வாயில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற மச்சம் உருவான அறிகுறி ஏற்பட்டு உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் நோயை குணப்படுத்த முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பற்சிகிச்சை பீட பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

வாய் புற்றுநோயால் நாளாந்தம் மூன்று பேர் மரணிக்கின்றார்கள். நாட்டில் நாளாந்தம் ஏழு வாய் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள். என்றும் சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவடன தெரிவித்தார்.

Related posts: