மாணவர்களுக்கு பாடசாலைகளில் அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்!

Wednesday, December 27th, 2017

புதிய ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்ற வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக, பிரபல பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளைகளின் பெயர் பட்டியல் உரிய பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உரிய பாடசாலை அதிபர்கள் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை தமது பாடசாலைகளில் இணைத்துக் கொள்வார்கள் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எம்.எம்.வேஹல்ல தெரிவித்துள்ளார்.

இம்முறை 24 ஆயிரம் மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளுக்கான அனுமதி கிடைத்துள்ளதோடு, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் உரிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

Related posts: