மாங்குளத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதுடைய நாகலிங்கம் யோகேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்று இதுவரை அறியப்படாத நிலையில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு!
யாழில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு!
யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்
|
|