மலேஷிய பிரதமருக்கு நல்லிணக்கம் குறித்து விளக்கம் கொடுத்தார் ஜனாதிபதி !

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்தும் ஜனாதிபதி மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமுக அபிவிருத்தி குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷியா வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய போதே குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
Related posts:
வெள்ளைவான் ஆவணங்கள் திருட்டு!
ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!
ஆங்காங்கே சொல்லிதிரிவதை விடுத்து கௌரவமாக வெளியேறுவதே சிறந்தது -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர...
|
|