மற்றுமொரு வாள்வெட்டுச் சம்பவம்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மாதா கோயிலுக்கு அருகாமையில், புதன்கிழமை இரவு வாள்வெட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மோட்டார் சைக்கிளில், குறித்த பகுதிக்கு வந்த மூவர், முகங்களை துணியால் மறைத்துக் கட்டியவாறு, அப்பகுதியில் நின்ற இளைஞர்களை வாளால் வெட்ட முயன்றுள்ளனர்.
எனினும் இளைஞர்கள் தப்பியோடியதால் அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து, யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பம் - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!
ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது - ஜனாதிபதி ரணில...
|
|