மற்றுமொரு குப்பை பிரச்சினை!
Sunday, April 30th, 2017
ஒஹிய பிரசேத்தில் அரசின் பயிர்ச் செய்கை நிலத்தில் முறையற்ற விதமாக குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒஹிய மற்றும் ஹோர்டன்தென்ன பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஒன்று சேர்கின்ற குப்பைகள் முறையற்ற விதமாக இப்பிரதேசத்தில் கொட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
எதிர்வரும் மழை காலத்தில் இப்பிரதேசத்தில் இருக்கின்ற தின்மக் கழிவுகள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு நீர் தேக்கங்களில் தேங்கி நின்றால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக இந்த சுற்றாடல் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு எடுக்குமாறு பிரதேசவாசிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டது - ஜனாதிபதி ஊட...
துபாயில் திறந்து வைக்கப்பட்டது பிரமாண்டமான இந்து கோவில் - அனைத்து தரப்பினருக்கும் அனுமதி!
போசாக்கின்மை சிறார்களின் கல்வியை பாதிக்கின்றது - உதவிக்கரம் நீட்டுங்கள் என வேலணை பிரதேச முன்பிள்ளை...
|
|
|


