மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் சிக்கலில்!
Saturday, January 21st, 2017
பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி வைத்திய சேவை பிரிவு மாணவர்களுக்கு கண்டி அல்லது பேராதனை வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படாமையினால் அந்த மாணவ மாணவிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக உதவி வைத்திய சேவை கூட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ பயிற்சிக்காக மாணவர்களுக்கு தேவையற்ற பணச் செலவு மற்றும் காலச் செலவு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் தர்மகீர்த்தி ஏபா கூறினார். மாணவர்கள் தற்போது மருத்துவ பயிற்சிக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக கூறும் தர்மகீர்த்தி ஏபா, அந்தப் பயிற்சிக்காக வரையறுக்கப்பட்ட சில குழுவினருக்கே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் சரியான தீர்வொன்று வழங்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
கடற்படை பேச்சாளர் நியமனம்!
மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சின் முழுமையான அனுமதியை...
உத்தேச தேர்தல்கள் சட்டமூலத்தின் மூலம் அபராதங்கள் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பு!
|
|
|
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அ...
ஒக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வ...
சுகாதார சேவைகளில் பணிபுரியும் குறிப்பிட்ட சில ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி ...


