மயிலிட்டி வடக்குக்கு தனியான கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்!

Tuesday, May 8th, 2018

மயிலிட்டிதுறை வடக்கு பிரிவிற்கான கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதனை கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

மயிலிட்டிப் பகுதியில் சில பிரிவுகள் மீளக் குடியமர விடப்பட்ட பின்னர் இப்பகுதிகளில் மீளக்குடியமர்ந்துள்ள கடற்றொழிலாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் உதவிகள் அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தீர்த்து வைப்பதற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தினை கருத்திற்கொண்டு இங்கு புதிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி வியாழக்கிழமை மயிலிட்டிதுறை மீனவர் இளைப்பாறும் மண்டபத்தில் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு கடந்த 02 ம் திகதி கூட்டுறவு ஆணையாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஜே/251 மயிலிட்டி துறை வடக்கு கிராம அலுவலர் ஆகியோர்களிடம் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்து மயிலிட்டி பிரிவிற்கான கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று செயற்படுகின்ற நிலையில் தற்போது மயிலிட்டிப் பகுதியில் ஜேஃ251 மயிலிட்டி துறை வடக்கு வீரமாணிக்கதேவன் துறை பகுதிகளில் மீள்குடியமர்ந்துள்ள கடற்றொழிலாளர்களின் நலன்சார்ந்த விடயத்திற்காக குறித்த கிராம அலுவலர் பிரிவினை உள்ளடக்கிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: