மனைவி மீது துப்பாக்கி சூடு: இராணுவ உயரதிகாரி பணி இடைநிறுத்தம்!
Thursday, September 1st, 2016
மனைவி மீது துப்பாக்கிச் சூட்டு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் மாலம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் இராணுவ லெப்டினன் கேணல் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மாலம்பே பிரதேசத்தில் தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்த இராணுவ உயர் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ உயர் அதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இருவருக்கும் இடையில் முரண்பாடு நிலவியதாகவும் விவகாரத்தின் போதான சொத்துக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான பிணக்கே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இராணுவ உயர் அதிகாரி தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


