மனைவியின் கத்திக் குத்துக்குள்ளாகி யாழ். பண்டத்தரிப்பில் கணவர் படுகாயம் 

Monday, October 16th, 2017

யாழ். மிருசுவில் பகுதியில் மனைவியின் கத்திக்குள்ளாகி கணவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று திங்கடகிழமை(16) மாலை குறித்த கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்த குறித்த குடும்பஸ்தர்  அயலவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.  போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ். கொடிகாமம் பொலிஸார்  மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினையே கத்திக்குத்துக்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: