மனிதாபிமான செயலுக்கு படையினர் பாராட்டு!

இனம்,மதம்,மொழி வேறுபாடு கடந்து விபத்து இடம்பெற்ற வேளையில் உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்த படைச்சிப்பாய்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற இளைஞர்களின் மனிதாபிமானச் செயற்பாட்டினை படையினர் ஆகிய நாங்கள் பெரிதும் பாராட்டுகின்றோம். என அல்லாரை தம்பு தோட்ட முகாம் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரியாலை நெடுங்குளம் பகுதியில் இடம்பெற்ற படையினரின் வாகன விபத்தில் காயமைந்த படைச் சிப்பாய்களை உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பித்த 8 இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று அல்லாரை தம்பு தோட்ட முகாமில் இடம்பெற்றது.
8 இளைஞர்களுக்கும் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிப் படையினர் கௌரவித்தனர்.
இதன்போது படை முகாமின் அதிகாரி தெரிவித்ததாவது,
இனம்,மதம்,மொழி வேறுபாடு இருந்தாலும் மனிதாபிமானம் என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும். விபத்து இடம்பெற்ற வேளையில் உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்த படைச் சிப்பாய்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற இளைஞர்களின் மனிதாபிமானச் செயற்பாட்டினை படையினர் ஆகிய நாங்கள் பெரிதும் பாராட்டுகின்றோம். காயமடைந்தவர்கள் பின்னர் சாவடைந்தாலும், அந்த வேளையில் உதவியவர்களை மறக்க மடியாது. மனித வாழ்க்கையில் ஒருவொருக்கொருவர் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் மனிதாபிமானம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்பான முயற்சி எமக்கு எடுத்துக்காட்டுகிறது.
நல்லிணக்கம் பற்றிப் பேசப்படும் இந்த வேளையில் இவ்வாறான செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் அனைத்துப் படையினரின் மனங்களையும் கவர்ந்துள்ளது. இந்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். என்றார்.
Related posts:
|
|