மத்திய வங்கி பிணை முறி மோசடி: தனியார் நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும்!

Wednesday, October 12th, 2016

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தின் பெறுமதி 5-15 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளதாகவும், இதுபோன்ற இலாபம் பெற்ற குறித்த தனியார் நிறுவனத்துக்கு சீல் வைக்க வேண்டும் என தான் அரசாங்கத்திடம் கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தினேஷ் குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயம் குறித்து மஹிந்த அமரவீர இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ள போதும், இதுவரை எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

அத்துடன், நிதி மோசடி சட்டத்தின் கீழ் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் 33,000 ரூபாவுக்கும், சில போஸ்டர்களுக்காகவும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதற்கமைய மத்திய வங்கியின் பிணை முறி மோசடி இந்த சட்டத்தின் கீழ் அடங்காதா என அரசாங்கத்திடம் தான் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

central-bank

Related posts: