மத்தியவங்கிக்கு புதிய துணை ஆளுநர் நியமனம்!
Wednesday, August 23rd, 2017
இம்மாதம் 19ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் இலங்கை மத்திய வங்கியின் புதிய துணை ஆளுநராக சி.ஜே.பி. சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு , நிதியியல் முறைமை உறுதிப்பாடு , இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் முகவர் தொழிற்பாடு உள்ளிட்ட துறைகளில் 31 வருடங்களுக்கு மேலான அனுபவத்தினை திரு.சி.ஜே.பி. சிறிவர்த்தன கொண்டுள்ளார்.
இவர் முன்னர் பொதுப்படுகடன் , தகவல் தொழில்நுட்பம், சட்டம், மற்றும் இணங்குவிப்பு ,பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு , மனித வளங்கள், கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்பு , கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவம் போன்ற திணைக்களங்களுக்கு பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவ...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளி...
|
|
|


