மதுபோதையில் தாயாரைத் தாக்கிய மகனுக்கு விளக்கமறியல்!
Friday, July 1st, 2016
தனது தாயாரைத் தும்புத் தடியால் தாக்கிய மகனை எதிர்வரும்- 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (29) உத்தரவிட்டார்.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞன் தினமும் மதுபோதையில் வந்து தாயாருடன் வாக்குவாதப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதுபோதையில் வந்த மகன் தனது தாயாரை வீட்டிலிருந்த தும்புத் தடியால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்துச் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம்- 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சி. சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
Related posts:
வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் - கஃபே அமைப்பு சுட்டிக்...
அரசியலமைப்பு பேரவைக்கு நிமல் சிறிபாலவை பரிந்துரை செய்தார் ஜனாதிபதி!
அரச ஊழியர்களின் சம்பளம் அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்தன ச...
|
|
|


