மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
Tuesday, June 6th, 2017
பொசன் போயா உற்சவங்களை முன்னிட்டு, 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு நாட்களுக்கு சகல மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று கலால்வரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், அந்த ஏழு நாட்களும், மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களிலும் சகல இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதுமட்டுமன்றி, விசேட சுற்றி வளைப்பு தேடுதல்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
வட்டுக்கோட்டையில் சுமார் 100 கிலோ கஞ்சா மீட்பு!
யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதானமாக செயற்பட ...
2023 இல் இது வரை 7,500 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


