மண்டைதீவில் 400 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மண்டைதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறாயினும், சந்தேகநபர்கள் எவரும் இதன்போது கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் குறித்த கஞ்சா பொதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில், தொடர்ந்தும் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரோசி சேனநாயக்க கொழும்பு மாநாகர சபையின் புதிய மேயர்?
குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து சில அதிகாரிகள் திட்டங்களைச் செயற்படுத்துவதால் அபிவிருத்தி நடவடி...
பாலின சமத்துவம், பெண்கள் அவலுவூட்டல் குறித்த ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை ந...
|
|