மட்டுவில் அம்மன் கோவிலுக்கு சென்ற பெண் விபத்தில் மரணம்!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சறுக்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
பங்குனித்திங்கள் தினமான இன்று காலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர்வீதியில் சறுக்கிவிழுந்து காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் மட்டுவில் தெற்கு பகுதியில் வசித்துவரும் 53 வயதுடைய விஜகாந்தன் சுசிகலா என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
சாவகச்சேரி பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சேதங்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் - நிதி அமைச்சு!
எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக குறைநிரப்பு பிரேரணை பிரதமரினால் சமர்ப்பிப்பு!
85,000 மில்லியன் ரூபாய்க்கான திறைசேரி உண்டியல் ஏலம் – மூன்று கட்டங்களாக விடப்படும் என இலங்கை மத்திய ...
|
|