மட்டக்களப்பு மாவட்டத்தில் நடமாடும் சேவை!
Wednesday, December 21st, 2016
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிசாரும் பிரதேச செயலகமும் இணைந்து நடமாடும் சேவையினை ஏற்பாடுசெய்துள்ளது. இந்த நடமாடும் சேவையானது பொலிஸ்பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையில் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையில் காணி உறுதிப்பத்திரம் வழங்கல், பொதுசன மாதாந்த உதவிப்பணத்துக்கான விண்ணப்பித்தல், அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பொலிஸ் பத்திரம் வழங்கல் ,ஆயுள்வேத மருத்துவசேவை என்பன வழங்கப்பட்டது. ஒருநாள் இடம்பெற்ற நடமாடும் சேவையில் 150 பேர் வரையில் பயன்பெற்றதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் சேவையில் சமூகசேவை உத்தியோகஸ்தர் கே.சிவகுமார்,பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர், கிராமசேவை உத்தியோகஸ்தர்களான வீ.கனகசபை, தி.கோகுலராஜ்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் த.விநாயகமூர்த்தி,காணி குடியேற்ற உத்தியோகஸ்த்தர் ,ரமேஸ், காணி வெளிக்கள போதனாசிரியர் ஈ.பகீரதன்; ஓந்தாச்சிமடம் ஆயுள்வேத வைத்திசாலை வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Related posts:
|
|
|


