மஞ்சள் கடவையில் ஏற்பட்ட விபத்தால் பறிபோனது பொலிஸாரின் பதவி!
Thursday, July 14th, 2016
கடமைக்கு உரிய நேரத்தில் சமுகமளிக்காததால் தம்புள்ளையில் ஒரு விபத்து ஏற்பட காரணமான பொலிஸ் அதிகாரியொருவர் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை நகரில் நேற்று முன்தினம் மாணவர்கள் சிலர் வீதியின் மஞ்சள் கடவையில் விபத்துக்குள்ளாகினர். இதன் போது அங்கு கடமையிலிருக்க வேண்டிய பொலிஸ் அதிகாரி சமூகமளித்திருக்காத நிலையில் அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காலை 6.00 மணிக்கு கடமைக்கு சமூகமளித்திருக்க வேண்டிய தம்புள்ளை பொலிஸ் இன்ஸ்பெக்டரான சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மேற்படி விபத்து இடம்பெறும் போது கூட கடமைக்குத் திரும்பியிருக்கவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தம்புள்ளை நகரில் தம்புலிகம மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் இடம்பெற்றுள்ளது. வீதியில் வேகமாக வந்த ‘கெப்’ வண்டி மோதியதில் அந்த பாடசாலையில் 6 மற்றும் 7ம் வகுப்புகளில் கல்வி கற்கும் மூன்று மாணவச் சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இடம்பெற்ற வேளையில் ஒரு பொலிஸ் அதிகாரி அங்கு கடமையிலிருந்துள்ளார். எனினும் சம்பந்தப்பட்ட தம்புள்ளை பொலிஸ் தலைமையக குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அங்கு கடமைக்குச் சமூகமளித்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
|
|
|


