மக்களுக்கும் நேர்மையான முறையில் அனைத்து அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் – ஜனாதிபதி!
Thursday, January 5th, 2017
நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையான முறையில் மக்களின் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில்; நேற்று முன்தினம் ஜனாதிபதியினால் வன பாதுகாப்பு திணைக்கள இலங்கை தொழில்நுட்ப சேவையின் பயிற்றுவிப்பாளர் தர வட்ட வன அலுவலர்கள் 71பேர் மற்றும் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் நிறைவேற்று தர உதவிப் பணிப்பாளர்கள் 26 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றினார்.
ஜனவரி 08ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இந்தியா, கேரளா மாநிலத்தில் நடைபெறும் பயிற்சிக்காக செல்லவுள்ள 34 கிராம அலுவலர்களுக்கான விமானச் சீட்டுக்களும் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினது எண்ணக்கருவுக்கமைய அமுல்படுத்தப்படும், கிராம அலுவலர்களுக்கான வெளிநாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தின் முதலாவது கட்டமாக இந்த பயணச்சீட்டுக்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தன மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுர சத்துரசிங்க ஆகியோர் உட்பட்ட சிரேஷ்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts:
|
|
|


