மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கை!

வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதி மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார்.
இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக மீள்கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு இப் பிரதேசத்தில் இடம்பெற்ற சேத விபரங்களின் மதிப்பீட்டறிக்கையை ஒரு வார காலத்துக்குள் கையளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இரத்தினபுரி தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களையும் சீர் செய்யும் பணிக்கு பொறுப்பாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் றிஷாடின் தலைமையில் இரத்தினபுரி பிரதேச செயலக கட்டிடத்தில் உயர்மட்ட மாநாடு ஒன்று கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
Related posts:
ஆசிரியையின் கோபத்தால் தீக்கிரையானது புத்தகங்கள்!
தனியார் நிறுவனங்களுடன் இன்று அவசர கலந்துரையாடல்!
கொரோனா தொற்று: மேலும் 44 பேர் உயிரிழப்பு!
|
|