மகிந்த ஆதரவுகாரணமாக அமைச்சர் பதவியிழப்பு!

எவ்விதமான அறிவித்தல்களும் இன்றி தனது அமைச்சு பொறுப்பு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் வடமத்தியமாகாணத்தின் முன்னாள் சுகாதார, தேசியமருத்துவ, சமூகசேவைகள் அமைச்சர் கே. ஏச் நந்தசேன தனிப்பட்ட காரணங்களுக்காகவே தனது பதவி பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர் தான் தொடர்நது மகிந்த ஆதரவாளராக இருப்பதால் தான் தனது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தான் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இவரது பதவிவிலக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாகாணசபையின் இன்னொரு அமைச்சரான சோமசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆடிச் செவ்வாயால் ஒத்திவைக்கப்பட்ட வடமாகாண சபை!
விஞ்ஞான பிரிவில் உயர்கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கல்வியமைச்சு!
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு - பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாய...
|
|