பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் !
Tuesday, April 25th, 2017
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பண்டிகையினை ஒட்டி மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெசாக் மற்றும் பொசன் தினங்களில் அன்னதான ஏற்பாடுகள் இடம்பெறும், இதன்போது மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பௌத்ததுறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பௌத்ததுறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த அறிவித்தல் அன்னதான ஏற்பாட்டாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பௌத்த கொடிக்கு பதிலாக மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !
மது வரி அதிகரிப்பு - சட்டவிரோத மது உற்பத்தியை நாடும் மக்கள்!
யாழ் மாவட்ட திராட்சை செய்கையாளர்களுக்கு விவசாய அமைச்சின் 7 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் திராட்சை செய...
|
|
|


