போலி மருத்துவர் சிக்கினார்!
Wednesday, May 3rd, 2017
சத்திரசிகிச்சை நிபுணர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்புளை நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த போலி மருத்துவர் ஒருவரை இளைஞர்கள் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்தப் பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரிடம் அவர் நிதி சேகரிக்க முற்பட்ட போது பெண்ணுக்கு அறிமுகமான சிலர் அந்த சந்தேக நபரை நேற்று முன்தினம் பிற்பகல் பிடித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மாத்தளையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புளை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
வடக்கில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் - மாவட்ட ரீதியில் ஆரம்பம்!
புரெவிப் புயலால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1425 ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு - கிளிநொச்சி மாவட்ட அரசா...
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையு...
|
|
|


