போலி நாணயத் தாள்களை பொலிஸில் ஒப்படைக்கவும் அச்சப்பட வேண்டாம்!

Monday, January 23rd, 2017

போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவ்வாறு இனம் கண்டால் அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனவும் ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும்  நெல்லியடி உதவிப் பொலிஸ் பரிசோதகர் கே.விமலவீர பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை வன்னிச்சை அம்மன் கோவிலடிப் பகுதியில் போலி நாணயத்தாள் அச்சிடும் வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டு போலி சாணயத்தாள்களும் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சே.விமலவீர,

3ஃ44 113801 எனும் நாணயத்தாளினை பிரதியாக்கம் செய்து கள்ளநோட்டு அச்சடித்தமை தெரிய வந்துள்ளது. இவ் இலக்கமுடைய நாணயத்தாள் தொடர்பில் கவனமாக இருக்குமாறும் மேலும் வேறு தாள்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். போலி நாணயத் தாள்கள் எனச் சந்தேகிக்கப்படும் நாணயத் தாள்களை நெல்லியடிப் பொலிஸில் ஒப்படைக்க முடியும். ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் கணேசானந்தன் மற்றும் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியகட்சத் பிரியந்த ஆகியோர் நெல்லியடிக் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் இவ்வாறான சம்பவம் இடம்பெறுகின்றனவா என்று கண்காணிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

sri-lanka-money-rupee-notes-1

Related posts: