போதையில் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Wednesday, August 17th, 2016
சேவையின் போது மது போதையுடன் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொலிஸ்மா அதிபருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்திர தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பஸ்களின் சாரதிகளே மதுபோதையுடன் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு மதுபோதையுடன் பயணிக்கும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் அதிகாரமுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியதாக இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார். இதன்பிரகாரம் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
மெல்லக்கற்கும் மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் வேள்ட்விசன் அதிகாரி தெரிவிப்பு!
வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா பயணம் – பதில் அமைச்சர்கள் நியமனம்!
|
|
|
எரிபொருளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை - தேவையற்ற வகையில் எரிபொருளை ...
ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் -- நிதி இராஜாங்க அமைச்...
சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் - சுகாதார அமைச்சர் தெரிவ...


