போதையில் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Wednesday, August 17th, 2016

சேவையின் போது மது போதையுடன் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொலிஸ்மா அதிபருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமசந்திர தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பஸ்களின் சாரதிகளே மதுபோதையுடன் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு மதுபோதையுடன் பயணிக்கும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் அதிகாரமுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியதாக இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார். இதன்பிரகாரம் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts:

மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் - இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்...
மருந்து விநியோகம் ஓகஸ்ட் மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் - செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சர...
சட்டமா அதிபருக்கு எதிராகச் செயற்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு...