போதையில் சாரத்தியம் இருவருக்கு ரூ. 6000 தண்டம்!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இரு சாரதிகளுக்கு தண்டத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மது போதையுடன் வாகனத்தை செலுத்தினார்கள் என இருவர் கைது செய்யப்பட்டனர். இரு சாரதிகளையும் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் காரணத்தால் இருவருக்கும் தலா 6000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சாரதி அனுமதிப்பத்திரங்களை இரு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது நீதிவான் மன்று.
Related posts:
மயிலிட்டியை விடுவிக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் வெடிக்குமாம் சொல்கிறார் மாவை !
ஏ.டி.எம்.அட்டை மூலம் ரூ.பல லட்சம் சுருட்டிய இலங்கையர் தமிழகத்தில் கைது!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்வு!
|
|