போதைப் பொருளுக்கெதிராக யாழில் பேரணி!

Tuesday, June 27th, 2017

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருளுக்கெதிரான  பேரணியொன்று  யாழில் இடம்பெற்றது.

யாழ். மத்திய பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக முற்பகல்-10 மணியளவில் ஆரம்பமான பேரணி சுமார் ஒரு மணித்தியாலம் வரை கவனயீர்ப்புப் போராட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாழ். முனீஸ்வரன் வீதி வழியாகப் போதை மற்றும் புகைத்தலுக்கெதிரான பல்வேறு பதாதைகளைக் கைகளில் தாங்கியவாறு யாழ். வீரசிங்கம் மண்டபத்தைச் சென்றடைந்தனர்.

யாழ். வீரசிங்கம் மண்டப முன்றலில் போதைப்பொருளுக்கெதிரான விழிப்புணர்வுக் கருத்துரைகளும் இடம்பெற்றன.இந்தப் பேரணியில் சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

Related posts: