போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

வடக்கு மாகாண தொழிற்றுறை திணைக்களத்தில் நிலவும் போதனாசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆளுநரின் அனுமதி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாண தொழிற்றுறை திணைக்களம் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு பயிற்சி நெறிகளை வழங்கி வருகின்றது. கிராம மட்டத்தில் அதிகளவான பயிற்சிகளை வழங்குகின்றது.
இதற்கான போதனாசிரியர்களுக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணியில் வெற்றிடம் காணப்படுகின்றது. நெசவு போதனாசிரியர் 10 மரவேலை போதனாசிரியர் 4 தும்பு போதனாசிரியர் 2 மேசன் தொழில் போதனாசிரியர் 4 மின் இணைப்பு மற்றும் நீரிணைப்பு போதனாசிரியர் 4 விற்பனை முகாமையாளர் 1 வடிவமைப்பாளர் 1 உள்ளிட்ட 26 வெற்றிடங்கள் நிலவுகின்றது. இவற்றை நிரப்புவதற்கு ஆளுநரின் அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே ஆளுநரின் அனுமதியைப் பெற்று மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|