போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப்பணம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி!

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
25,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
நேற்று(15) நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. 7 வகையான மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து பேசுவதற்காக நேற்றைய சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
எனினும், வேறும் சில போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் யோசனை முன்வைத்த காரணத்தினால் அதற்கு இணங்க முடியாது எனத் தெரிவித்ததாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அன்ஜன இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
புதிய அபராதத் திட்டம் தொடர்பில் இரண்டு வாரங்களில் யோசனைகளை முன்வைக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|