போக்குவரத்தில் ஈடபடும் தவறுகள் தொடர்பில் அபராதத் தொகை அதிகரிப்பு!
Friday, February 17th, 2017
வரவு – செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, வாகனப் போக்குவரத்தில் ஏற்படும் பிரதான தவறுகள் 7இற்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில், அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக, 30இற்கும் அதிக தவறுகளுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுயதொழிலாளர் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நீதியமைச்சின் செயலாளர், மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்..

Related posts:
புதிய வாடிக்கையாளர் சேவை முறை அறிமுகம்!
இலங்கை கடற்படையினர் அதிரடி நடவடிக்கை – சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்கள் 23 பேர் கைது!
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - ஜனாதிபதி கோட...
|
|
|


