பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்!

இந்நாட்டில் பொது மக்களைப் பாதுக்காக்கும் சேவகர்களாகச் செயற்படும் பொலிஸீக்கு எதிராக குரோதம் இழைக்காதீர்கள் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கண்ணீர் மல்க உணர்ச்சி பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குற்றப்பபுலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பயங்கரவாதம் இல்லை. பிரிவினை வாதம் இல்லை. மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகின்றனர். தங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற வேண்டுகோளை மக்கள் விடுக்கின்றனர். இவர்கள் தங்களது இந்த வேண்டுகோளை வைத்தியர்களிடமோ, ஆசிரியர்களிடமோ விடுக்கவில்லை. பொலிஸாரிடமே விடுக்கின்றனர். பொலிஸாருக்கு எவ்வளவு ஏசினாலும், தனிப்பட்டவர்களை தூசித்தாலும் பொதுமக்களின் இந்த வேண்டுகோளை பொலிஸார் நன்றாக விளங்கியே செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|