பொலிஸ்மா அதிபர் – கடற்படை தளபதி சந்திப்பு!
Friday, July 22nd, 2016
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜயகுணரத்னவை கடற்படை தலைமையகத்தில் இன்று (22) சந்தித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர, நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படை தளபதியுடன் இடம்பெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். இதன்போது கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டது.
பினனர் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இரு தரப்பு நினைவுச் சின்னங்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன் கடற்படை விருந்தினர் நினைவுக் கையேட்டில் பொலிஸ்மா அதிபர் கையொப்பமிட்டார்.
Related posts:
வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமர்!
புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட தயார் - அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உ...
விளையாட்டுக் கல்வி துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை - ஹங்கேரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
|
|
|


