பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை – துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!
Wednesday, April 20th, 2022
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் அரசியல் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே செயற்பட்டதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
போராட்டக்காரர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் போராட்டக்காரர்கள் பொது நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் போது தலையிடுவது பொலிஸாரின் கடமை எனவும் அவர் கூறினார்.
நேற்று சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, காயமடைந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸாரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


