பொலித்தீன் பாவனைக்கு தடை!

Sunday, November 20th, 2016

இதனால், சிவனொளிபாத மலைக்கு யாத்திரகைளை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்,  பொலித்தின் பைகள் மற்றும் பிளாஸ்திக் தண்ணீர் போத்தல்களை கொண்டுச் செல்வதை தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட பொதுசுகாதார பரிசோதகர் பீ.டி.கே கோரியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

“சிவனொளிபாத மலை பருவ யாத்திரை தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பில், நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத்தீர்மானத்துக்கு அமைவாக, நல்லத்தண்ணியிலிருந்து சிவனொளிபாத மலையடிவாரம் வரையுள்ள அனைத்து ஹோட்டல்களிலும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் தண்ணீர் போத்தல்கள் சந்தைப்படுத்தப்படுதல் மற்றும் விற்பனை செய்தல் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணி, கஹுலுதென்ன, இதிகடுபான போன்ற பிரதேசங்களில், தடைவிதிப்பையும் மீறி, பொலித்தீன் பைகள் மற்றும் தண்ணீர்போத்தல்கள் விற்பனை செய்யப்படும்பட்சத்தில், அவை பொலிஸாரின் அனுமதியுடன் பொதுசுகாதார பரிசோதகர்கள் பறிமுதல் செய்யப்படுமெனவும் அவர் கூறினார்.

பருவகாலத்தில், யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, வீதிகளின் இரு மருங்கிலும்  சுத்தமான குடிநீரை பெற்றுகொடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த பருவ யாத்திரையின்போது, பெருமளவான பிளாஸ்திக் தண்ணீர்போத்தல்கள் மற்றும் குடிபான போத்தல்கள் வீதிகளில் வீசி எறியப்பட்டிருந்ததால், பொதுமக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

polithen

Related posts: