சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் கடன்!

Wednesday, May 10th, 2017

1948 ஆம் ஆண்டு இலங்கை,பிரித்தானியகாலனித்துவத்திலிருந்துசுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையில் பிரதமர் தலைமையிலானஆட்சி நிறுவப்பட்டது.  1950 ஆம் ஆண்டுஇலங்கையின் கடன் தொகை 654 மில்லியன் ரூபாவாக இருந்தது. இதில் 529 மில்லியன் ரூபாதேசியகடனாகும்.125 மில்லியன் ரூபாசர்வதேசக்கடனாகும்.

1954 ஆம் ஆண்டுமொத்தக் கடன் தொகை 1,164 மில்லியன் ரூபாவாகஉயர்ந்தது. இத்தொகை, 1953 ஆம் ஆண்டு 1,249 மில்லியன் ரூபாவாக இருந்தது.அன்றுமுதல் இன்றுவரை இலங்;கையில் கடன்தொகைகுறைந்தவருடமாக 1954 ஆம் ஆண்டே இருந்துள்ளது.

1972 ஆம் ஆண்டில் முழுக்கடன்தொகை 8,684 மில்லியன் ரூபாவாகஅதிகரித்தது. 1977 ஆம் ஆண்டில் 24,985 மில்லியன் ரூபாவாகும். 1994 ஆம் ஆண்டில் 556,931 மில்லியன் ரூபாவாகஉயர்ந்தது. இது மொத்தத் தேசியஉற்பத்திவிகிதத்தில் 95.1 ஆகும். 2001 ஆம் ஆண்டு 1,452,706 மில்லியன் ரூபாவாகஅதிகரித்தது.

2012 ஆம் ஆண்டு 6,000,112 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு இறுதியில் முழுக் கடன்தொகை 9,387,303 மில்லியன் ரூபாவாகியது.

இதில் 5,341,507 மில்லியன் ரூபாதேசியக் கடனாகும்.4,045,796 மில்லியன் ரூபாசர்வதேசகடனாகும் எனபுள்ளிவிபரமொன்றுசுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: