தேசிய லொத்தர் சபை வெளி விவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை சட்டவிரோ தமானது – ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல்

Monday, June 19th, 2017

தேசிய லொத்தர் சபையை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை வர்த்தமானியில் பிரசுரிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐலண்ட் பத்திரியில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி தேசிய லொத்தர் சபை 1963 ஆம் ஆண்டு 11ஆம் இலக்க சட்டத்தின்படி நிதி அமைச்சுக்கே உரித்துடையது.அதன் 22ஆம் சரத்தின்படி, ஜனாதிபதியினால் நிதி அமைச்சராக நியமிக்கப்படும் அமைச்சரே தேசிய லொத்தர் சபைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

இதேவேளை, தேசிய லொத்தர் சபையை நிதி அமைச்சிலிருந்து வேறு அமைச்சொன்றுக்கு வழங்கியமை சட்டவிரோதமானது என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.அவ்வாறு வேறு அமைச்சர்களின் கீழ் தேசிய லொத்தர் சபையை கொண்டுசெல்வதற்கு சட்டப்பின்புலம் இல்லை எனவும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷோக அபேசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, தேசிய லொத்தர் சபையை மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.தேசிய லொத்தர் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு அமைய புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு 11ஆம் இலக்க சட்டத்தின்படி இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கோப் குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளதாக லொத்தர் சபையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: