வறட்சியை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள் வழங்கப்படும்!

Wednesday, March 1st, 2017

வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு பயிரினங்கள் வழங்குவதங்கு முதற்கட்டமாக கொழும்பு அரசு 1.4மில்லியன் பெறுமதியான விதைகளை வழங்கவுள்ளது என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தெரிவித்துள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த முறை வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பொதுவாக மரக்கறிச் செய்கையாளர்கள், நெற் செய்கையாளர்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதுடன் வறட்சி காரணமாக மாவட்டத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

ஒரு மில்லியன் பெறுமதியான இந்தத்திட்டம் கொழும்பு அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு குரக்கன், எள்ளு, வத்தாளை, உளுந்து, பயறு கௌப்பி போன்ற விதைகள் முதற் கட்டமாக வழங்கப்படவுள்ளன. இந்த உதவித் திட்டத்தின் மூலம் வறட்சியான காலப்பகுதியிலும் இந்த விதைகள் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு உணவுத்தட்டுப்பாட்டிலிருந்து ஓரளவு விடுபட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்தத்திட்டத்திற்கு தேவையான நிதி அரச தலைவர் செயலகத்தால் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, இலவசமாக விதைகள் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன் விவசாயிகள் மற்றுமு; பயனாளிள் கமநல சேவைக் திணைக்களம், பிரதேச சயெலகங்கள் ஊடாக இவற்றற் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

_93567422_4

Related posts: