அனுராதபுர துப்பாக்கி சூடு: குழப்பத்தில் பொலிஸார்!

Monday, May 2nd, 2016
அனுராதபுரம் – திரப்பனை பகுதியில், நேற்று துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று பேர்களின் தகவல்கள் தெரியவந்துள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில், ஒருவர் கொலை மற்றும் கொள்ளையடித்தல் போன்ற பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்த நொச்சியாகமை பிரதேசத்தினைச் சேர்ந்த சரத் பண்டார அல்லது எஸ். எப் பண்டார ஆவார்.

இரண்டாம் நபர், தவறான நடத்தையுடைய நொச்சியாகம பிரதேசத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய குமார என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மூன்றாம் நபர், காலி – ஹிங்தொட பிரதேசத்தினை சேர்ந்த மகிந்த கமகே பிரதீப் குமார எனும் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்டுள்ள மூவரும் பயணித்த கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர் கிலிஒய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அறியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிடும் போதும் கார் இயங்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த கார் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி காணப்பட்டதுடன், காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்து காணப்பட்டதாகவும், குறித்த கார் வடமத்திய மாகணத்தில் பதிவு செய்யப்பட்ட கார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இக் கொலை இடம் பெற்ற முறை பொலிஸாரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:


ஜூலை 11 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் - மே 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கட்சிகளின் தலைவர்கள் கூட...
ஊழிர்களின் நலன் கருதி பொதுப் போக்குவரத்து சேவையில் 5700 பேருந்துகள் - இலங்கை போக்குவரத்து சபை தெரிவி...
இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் க...