பொறுப்பற்ற வர்த்தகர்களை முற்றுகையிட நடவடிக்கை!

பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்ளும் வர்த்தகர்களை உடனடியாக கண்டறிவதற்காக சுற்றிவளைப்பு பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சில வர்த்தகர்கள் மோசடி நடவடிக்கையில ஈடுபடுவதாக முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரிவு வாடிக்கையாளர்களை பாதுகாக்கும்பொருட்டு அவர்களை தெளிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அறிவுரைக்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இது தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்கு வசதியாக பின்வரும் தொலைபேசி இலங்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாகாணம் தொலைபேசி இலக்கம்
மேல் 0771088914 / 0771088907
தென் 0771088903
வடக்கு 0771088914
ஊவா 0771088895
கிழக்கு 0771088899
வட மத்திய 0771088907
சப்ரகமுவ 0771088904
வட மேல் 0771088902
மத்திய 0771088905
Related posts:
கல்வி அமைச்சராக இராதாகிருஷ்ணன்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது!
சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப...
|
|