பேஸ்புக் விருந்துபசாரத்திற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு!

Monday, July 17th, 2017

சமூகவலைத்தளங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டு ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்து அங்கு போதைப் பொருட்களை பயன்படுத்தி தவறான முறையில் நடந்து கொண்ட தரப்பினருக்கு உதம்மிட்ட கிராமவாசிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையை கட்டுப்படுத்துவதற்கு காவற்துறையினர் தலையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சமூகவலைத்தளங்கள் ஊடாக இளைஞர், யுவதிகளுக்கு அறிவிக்கப்பட்டு இந்த விருந்துபசாரம் நேற்றைய தினம் முழுவதும் ஜாஎல – உதம்மிட்ட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.இதன் முதலாவது கட்டம் அண்மையில் உஸ்வெட்டகெய்யாவ பிரதேசதத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது நுழைவு கட்டணமாக ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. இந்த விருந்துபசாரத்தின் இரண்டாவது கட்டம் உதமிட்ட பிரசேத்தில் உள்ள ஹோட்டலில் நேற்று இடம்பெற்றுள்ளது.இதில் ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விருந்துபசாரத்தின் போது மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்திய அந்த தரப்பினர் ஹோட்டலுக்கு வெளியே வந்து தவறான முறையில் நடந்து கொண்டமை காரணமாக கிராமவாசிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: