உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, March 14th, 2021

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதரணதர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி நடத்தப்படமாட்டது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண பணிப்பாளர்களையும் Zoom தொழில் நுட்பத்தினூடாக இணைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை மற்றும் உரிய முறையில் பாடத்திட்டம் நிறைவு செய்யப்படாமையினால் ஆகஸ்ட் மாதத்தில் பரீட்சைகளை நடத்துவது நியாயமற்றதென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சைகளை  ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதுடன் அதை நடத்துவதற்கான காலம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: