பேருந்துக்காகக் காத்து நின்ற குடும்பப் பெண்ணொருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

பேருந்துக்காகக் காத்து நின்ற குடும்பப் பெண்ணொருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணியளவில் யாழ். வேலணை வங்காளவடிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். வேலணையிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணி செய்து வந்த குறித்த பெண்மணி செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்து தரிப்பிடத்திற்கு வருகை தந்து நீண்ட நேரமாகக் காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகப் பேருந்திற்காகக் காத்திருந்த குறித்த பெண்மணி திடீரென தலைசுற்றி மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார். உடனடியாகக் குறித்த பெண்மணியை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ். வேலணை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|