பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

புதிய வரவு செலவு திட்டத்தில் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார துறைகளில் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கொட்டகல நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பகல் அவர்கள் நகரின் மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் கூறினார். கடந்த வரவு செலவு திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நூற்றுக்கு 50 வீதமான நிதி இம்முறை வரவு செலவு திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இலவச சுகாதார சேவையின் நிதியும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்!
பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் - சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கும் கல்வி அமை...
யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் - தாதியருக்கு வெளிநாடு செல்ல பய...
|
|