பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் – சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Friday, June 9th, 2023

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை நிறைவடைந்த பின்னர் நேற்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அடுத்த பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

எனினும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஜூன் 12ஆம் திகதிக்குப் பின்னர் அது தொடர்பில் அறிவிக்கலாம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது மே 29ஆம் திகதி முதல் நேற்றைய தினம் 8 ஆம் திகதி வரை இடம்பெற்றதன் காரணமாக கடந்த நாட்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: