யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு கொவிட் தொற்றுறுதி!
Saturday, April 10th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 24 பேருக்கு நேற்றையதினம் கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் நேற்றைய தினம் 760 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் 26 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களில் யாழ்ப்பாணத்தில் 24 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !
எதிர்வரும் போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்கத் நடவடிக்கை - கமத்தொழில் அமைச்சர் ம...
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்...
|
|
|


